தந்தையால் கைகூடாமல் போன விஜய்யின் காதல்... அடடே இந்த நடிகை தானா அது?
காதல் என்பது அனைவருக்கும் வருவது இயல்புதான். இதற்கு நடிகர்கள் மட்டும் விதிவிலக்கல்ல.
அந்த வகையில் நடிகர் விஜய்க்கும் ஒரு நடிகை மீது காதல் மலர்ந்திருக்கின்றது.
அந்த நடிகை வேறு யாருமில்லை. இவருடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு, ரசிகன், நிலவே வா போன்ற திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை சங்கவி தான்.
image - Telugulives
படப்பிடிப்பு நேரம் போக வீட்டுக்கு வந்ததன் பின்னரும் இருவருக்கும் இடையில் தொலைபேசி தொடர்பு தொடர்ந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் நட்பு காதலாக மாறியிருக்கிறது.
இந்த விடயம் விஜய்யின் தந்தையான இயக்குநர் சந்திரசேகருக்கு தெரியவரவே, காதல் விடயங்களில் தற்போது சிக்கினால் சினிமா கேரியர் சீர்குலைந்துவிடும் என நினைத்து, ஒரு நடிகை எனக்கு மருமகளாக வரமுடியாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.
அப்போது முழுக்க முழுக்க தனது தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் அவர் கூறுவதைக் கேட்டு, தனது காதலை கைவிட்டு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய்.
image - Indiaglitz