உறவின் உன்னதத்தை உணர்த்துவது நட்பு!
பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் தான்.
ஆகவே நல்ல ஒரு நட்பை தெரிந்தெடுத்துக் கொள்வது அனைவரினதும் தனிப்பட்ட ஒரு முடிவு.
பொதுவாகவே நீங்கள் யார் என்று தெரிந்துக் கொள்ள உங்களது நண்பர்களை மட்டும் தான் பார்வையிடுவார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு நட்பு ஒரு வலிமையான உறவாகும்.
இவ்வாறு வாழ்கையில் பிணைந்து இருக்கும் நட்பை பற்றி பார்ப்போம்.
நட்பானது தலை நட்பு, இடை நட்பு மற்றும் கடை நட்பு என்று மூவகைப்படும்.
தலை நட்பானது சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
இடை நட்பானது உள்ளொன்று வைத்து வெளிபுறம் ஒன்று பேசுவதாகும்.
கடை நட்பானது தன் நண்பனுக்கு பல வகையான துக்கங்களை தரக்கூடிய ஒரு உறவாகும்.
ஒருவரிடம் நட்புக் கொள்ள வேண்டுமாயின் முதலில் அவர்கள் இதில் எந்த வகை என்று பார்க்க வேண்டும். அதன் பின்னரே பழக வேண்டும்.
நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு நமக்கு நன்மையே தரும். தீயவர்களிடம் கொள்ளும் நட்பு நம்மைத் தீய வழியில் கொண்டு சென்று நமது வாழ்க்கையே அழித்துவிடும்.
அதேப்போல் தீயவர்களிடம் கொள்ளும் நட்பானது நீண்டக் காலத்திற்கு நீடிக்காது.
தீயவர்களிடம் நட்பு வைத்திருந்தால் நாமும் தீயவர்களே.
முக்கியமாக சிரித்து பேசி பழகுவது நட்பாகாது. இதை வள்ளுவரும் ஒரு குறளாக வடிவமைத்துள்ளார். அதாவது,
'முகநக நட்பது நட்பன்று : நெஞ்சத்து அகநக நட்பது நட்பு'
தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரிடம் பணம் இருந்தால் மட்டுமே சில உறவுகள் நீடிக்கும். ஆனால் நட்பானது கடைசி காலம் வரை வரும். அதுவும் சிறந்த ஒரு நட்பாக இருந்தால் மட்டுமே.
எப்பொழுது பணம் இல்லாமல் தவிக்கிறாரோ, அவரிடம் கொண்ட நட்பைத் துண்டித்து விடுவார்கள்.
துன்பக் காலத்தில் கைவிட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட செயல் நட்புக்குக் துரோகம் செய்வதற்குச் சமமாகும்.
அதாவது ஒருவனுடைய குணத்தையும் குடிபிறப்பையும், குற்றத்தையும் குறைவற்ற சுற்றதையும் ஆராய்ந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
மேலும் பொய்யான ஒரு நட்பை நீங்கள் கண்டறிந்தால் அதை உடனே துண்டித்துவிட வேண்டும்.
நட்பு தொடர்பாக பல கருத்துகள் காணப்படுகின்றன. அவைகள் பற்றி சிறிதளவு பார்ப்போம்.
- ஒரு வயிற்றில் பிறக்கவில்லை இருந்தும்
பிரிவு என்பதே இதற்கு இல்லை
உடலால் பிரிந்தாலும் உயிரோடு
இணைந்திருக்கும் எந்நாளும்.
-
என்னை நான் அறிய
நான் தேடுவது நட்பையே..
காதலில் வெற்றி தோல்வி உண்டு
நட்பில் அதில்லை என்பதாலோ
என்னவோ தனித்து நிற்கிறது நட்பு.
-
நமக்கு நட்பு என்பது எந்த இடத்தில்
கிடைக்கும் என யாராலும்
சொல்ல முடியாது.. அது எங்கு
வேண்டுமானாலும் கிடைக்கும்.
-
தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால்
வேதனை கூட சாதனை ஆகும்.
-
புன்னகை ஒன்றே போதும்
நண்பர்களை சேகரிக்க
புதைந்து போகும் வரை
தொடர்ந்து வரும் நல்ல நட்பு.
-
நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது.
-
நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான். ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்.
- நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டுமே தான் புரியும்.