யாரெல்லாம் வல்லாரை கீரை சாப்பிடக் கூடாது தெரியுமா?ஆபத்து விளிம்பில் நிற்கும்!
பொதுவாக நம்மிள் பலர் கீரைகள் சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக கூறி, தினமும் ஒவ்வொரு கீரைகள் சாப்பிட்டு வருகிறார்கள்.
ஆனால் சில கீரைகளை நோயுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனின் கீரையில் உள்ள சில வைட்டமின்கள் மற்றும் சத்துக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக கீரைகளின் ராஜாவாக இருக்கும் வல்லாரை கீரை பற்றி அறிந்திருப்போம். இந்த கீரையை அடிக்கடி சாப்பிடும் பொழுது யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவு நினைவாற்றல் அதிகரிக்கும்.
மற்ற கீரைகள் போன்று இந்த கீரையையும் துண்டல், வறுவல், துவையல் என பல விதங்களில் சமைத்து உண்ணலாம். அதே போன்று மூலிகை தாவரங்களில் மிகவும் முக்கியமான கீரையாக இருக்கும் வல்லாரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கின்றன.
அந்த வகையில், யாரெல்லாம் வல்லாரை கீரை சாப்பிடக்கூடாது என்பதை பதிவில் பார்க்கலாம்.
தினமும் சாப்பிடலாமா?
1. வல்லாரை கீரையை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது ஒவ்வாமை எதிர்வினை வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.
2. வல்லாரை கீரை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் அதிகமாகலாம்.
3. அளவுக்கு அதிமாக வல்லாரை கீரை சாப்பிடும் ஒருவருக்கு தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும்.
4. சிலர் வல்லாரை கீரையின் நன்மையை அதிகமாக பெற்றுக் கொள்வதற்காக அதிகமாக சாப்பிட்டு, வலிப்பு நோய் போன்ற நோய்களின் தீவிரதத்தை அதிகப்படுத்தி விடுவார்கள்.
5. மூளையில் ஏற்படுகிற வேதிப் பொருட்களை அதிக அளவில் தூண்டி விடும் வேலையை வல்லாரை கீரை செய்கிறது. அதே போன்று வல்லாரை கீரையில் உள்ள ஆக்சலேட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கும். அதற்கு முன்பு சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு அல்லது சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் உள்ளவர்கள் இந்த கீரையை அளவுடன் எடுத்து கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது
- அழற்சி உள்ளவர்கள்
- வலிப்பு நோய் உள்ளவர்கள்
- அழற்சி பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
- சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வல்லாரை கீரை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |