சினிமாவில் நீங்கா இடம்பிடித்த வில்லிகள்...
சினிமாவை எடுத்துக்கொண்டால் ஹீரோக்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கின்றது என்று ஒரு காலத்தில் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் முறியடித்துவிட்டு ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதையும்தாண்டி சில வில்லி கதாபாத்திரங்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அவற்றை பார்ப்போம்.
image - slovenska filmova databaza
ஸ்ரேயா ரெட்டி
நடிகர் விஷால் நடிப்பில் 2006ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் திமிரு. இதில் ஈஷ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
இவர் தன்னை நிராகரித்த ஹீரோவை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் இவரைக் கண்டு பயப்படாதவர்களே இருக்க மாட்டார்கள்.
image - Twitter
ரீமா சென்
நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வல்லவன். இதில் சிம்பு மீது கொண்ட அதீத காதலால் அவரை மிகவும் கொடுமைப்படுத்திருப்பார் நடிகை ரீமாசென்.
அதுமட்டுமில்லாமல் தனது காதல் தோல்வியில் முடிந்தவுடன் சைக்கோவாக மாறி தனது வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.
image - hotcore.info
ரம்யா கிருஷ்ணன்
படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்தை என்றுமே ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தளவுக்கு ரம்யா கிருஷ்ணனின் நடிப்பும் வசனங்களும் அமைந்திருக்கும்.
தான் விரும்பிய வாழ்க்கை தனக்கு கிடைக்காத காரணத்தினால் பழிவாங்கும் எண்ணத்தில் பல வேலைகளைச் செய்வார்.
image - The movie Database
ஜோதிகா
பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் நல்லவரைப் போல் நடித்து ஆண்களை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்திருப்பார்.