சுவாச நோய்க்கு எதிராக போராடும் வெற்றிலை
பொதுவாகவே தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலுமே வெற்றிலை பாக்கு காணப்படும். இது சடங்கு சம்பிரதாயங்களுக்கு மட்டுமல்லாது பல நோய்களுக்கும் அருமருந்தாக காணப்படுகிறது.
நவீன வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விந்தணு உற்பத்தியின் வீரியம் குறைந்து வருகிறது. அதற்கு வெற்றிலை சிறந்த தீர்வாக காணப்படுகிறது.
வெற்றிலையானது, ஆண்களின் விதைப்பையை வலுப்படுத்துவதோடு, விதைப்பை புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு என்பவற்றை சரியான அளவில் கலந்து சுவைக்கும்போது அது உடலுக்கு மட்டுமில்லாது மூளைக்கும் சுறுசுறுப்பை வழங்கி, இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
சரி இனி வெற்றிலையினால் என்னென்ன உடல் ரீதியான நன்மைகள் இருக்கின்றதென பார்ப்போம்...
சுவாச நோய்கள்
இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய்களின் சிகிச்சைக்காக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதன் இலைகளில் காணப்படும் கலவையானது கபத்தை குறைக்கிறது.
நீரிழிவு
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் காலையில் எதுவும் சாப்பிடாமல் வெற்றிலை இலைகளை மென்று சாப்பிட வேண்டும். காரணம், வெற்றிலையில் இரத்தச் சர்க்கரைக் குறைவைத் தடுக்கும் பண்புகள் காணப்படுகின்றன.
அதுமட்டுமில்லாமல் குளுக்கோஸின் அளவையும் அதிகரிக்கும்.
மலச்சிக்கல்
வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்ததும் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் வராது.
மன அழுத்தம்
வெற்றிலையை மென்று உண்பதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்களை தவிர்க்க முடியும். வெற்றிலையில் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் பண்பு காணப்படுகிறது.
வாய் ஆரோக்கியம்
பல் வலி, ஈறு வலி, வாயில் ஏற்படும் தொற்று என்பவற்றுக்கு மருந்தாக காணப்படுகிறது. மேலும் மஞ்சள் பற்கள், வாய் துர்நாற்றம், பற்சிதைவு என்பவற்றுக்கும் சிறந்த நிவாரணமாக உள்ளது.
image - trell