எலும்பு இரும்பு மாதிரி வலுவாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க
கறிவேப்பிலையுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் எலும்பு இரும்பு மாதிரி இருக்குமாம். அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்
கறிவேப்பிலை
சமையலில் கறிவேப்பிலை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளது. இதனை குழம்பு, பொரியல் இவற்றில் தாளிப்பிற்கு அதிகமாக தென்னிந்திய மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் சத்துக்கள் நிறைந்த இதனை பலரும் ஒதுக்கி வைக்கவே செய்கின்றனர். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளதுடன், செரிமானத்திற்கும் உதவுகின்றது.
கொலஸ்ட்ராலை சீராக்கவும், சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும் உதவுகின்றது. 100 கிராம் கறிவேப்பிலையில் 830 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.

இதனால் எலும்பு, பற்கள் மற்றும் மூட்டு இவைகள் வலிமையாக வைப்பதற்கு பயன்படுகின்றது. கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருக்கின்றது.
கறிவேப்பிலையுடன் இன்னும் சில உணவுகளை சேர்த்து எடுத்தால், கால்சியம் சத்து இரட்டிப்பாக கிடைக்குமாம். அவைகளை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எள்ளு
கால்சியம் சத்து அதிகம் உள்ள எள்ளு விதையினை 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டால் 88மிகி கால்சியம் உள்ளது. பற்கள், எலும்புகள், தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது.
மேலு்ம் இதில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் உள்ளது. எள்ளு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடியாக தயாரித்து சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட்டால் பலனைப் பெறலாம்.

ராகி
தானியங்களில் அதிக கால்சியம் சத்தைக் கொண்டுள்ளது ராகி. 100 கிராம் ராகியில் சுமார் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ராகி மாவுடன் கறிவேப்பிலையை வறுத்து சேர்த்து தோசையாகவோ அல்லது ரொட்டியாகவோ அல்லது கஞ்சியாகவே சாப்பிடவும்.

பனீர்
பனீரில் கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கின்றது. 100 கிராம் பனீரில் 200 முதல் 250 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எலும்பு மற்றும் பற்களை வலிமையாக வைத்துக்கொள்ளவும், தசைகளின் செயல்பாட்டை ஆதரிக்கவும் செய்கின்றது.
நரம்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும ்நிலையில், அதிகளவு கால்சியத்தினை பெறுவதற்கு பனீரில் கறிவேப்பிலையை சேர்த்து சாப்பிடவும்.

பாதாம்
பாதாமிலும் கால்சியம் அதிகமாகவே இருக்கின்றது. 100 கிராம் பாதாமில் 264 மில்லிகிராம் கால்சியம் இருப்பதுடன், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களும் உள்ளது.
கால்சியம் சத்து நிறைவாக கிடைக்க வேண்டுமெனில், பாதாமுடன், கறிவேப்பிலையை சேர்த்து சட்னி அல்லது சால்ட் மீது துவியோ சாப்பிடலாம்.

முருங்கைக்கீரை
கறிவேப்பிலையைக்கு இணையாக முருங்கைகீரையிலும் கால்சியம் சத்து நிறைத்துள்ளது. வெறும் 100 கிராம் முருங்கைக்கீரையில் 440மில்லி கிராம் கால்சியம் கிடைக்கின்றது.
எலும்பு, பற்கள் மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில் கீரையை கறிவேப்பிலையுடன் பொரியலாக செய்து சாப்பிடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |