தாய்கிழவி வெற்றி விழா: மனைவியை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்! வைரலாகும் காணொளி
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, ராதிகா மையக் கதாபாத்திரமாக நடித்து வெளியான படம் தாய் கிழவி.படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் திகதி வெளியாகி 13 நாட்களில் உலகளவில் ரூ. 57.9 கோடி வசூல் செய்து செய்து வசூல் வெறியாட்டம் ஆடிவருகின்றது.

சிவக்கார்த்திகேயன் ஓபன் டாக்
படம் இன்னும் திரையரங்குகளில் சக்சஸ்ஃபுல்லா ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய சிவக்கார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி குறித்து பகிர்ந்த விடயங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
சிவகார்த்திகேயன் குறிப்பிடுகையில், "நான் தயாரித்த கனா, தாய்க்கிழவி போன்ற படங்களுக்கு வெற்றி கிடைக்கும் போது நிறைவு கிடைக்கிறது" என கூறினார்.

ஆர்த்தி குறித்து பேசுகையில், "எனக்கு திருமணம் ஆன நாளில் இருந்து ஆர்த்தி தான் வரவு செலவு கணக்குகளை பார்க்கிறார். என் வங்கி கணக்கில் எவ்ளோ பணம் இருக்கு என எனக்கு தெரியாது.
செலவுக்கு பணம் வேண்டும் என்றால் ஆர்த்தியிடம் தான் கேட்டு வாங்குவேன். அதை பெருமையாக நினைக்கிறேன்.
அவர் பார்த்துக்கொள்ளவில்லை என்றால் என்னால் ப்ரொடக்ஷன் எல்லாம் பண்ணியிருக்கவே முடியாத.. என உருக்கமாக பேசியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |