நரைமுடிக்கு டை தேடுறீங்களா? தே.எண்ணையில் இந்த இலையை ஊறவைத்து போடுங்க
நரைமுடிக்கு டை செய்வதற்கு வெட்பாலை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதை எபயன்படுத்தும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
வெட்பாலை இலைகள்
வெட்பாலை இலைகள் பொதுவாக சரும நோய்கள் முதல் மனச்சோர்வு வரை பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இந்த இலைகள் மிழ்நாட்டின் வறண்ட நிலப்பரப்புகளிலும் செழித்து வளரும் ஒரு அரிய மூலிகை மரமாகும்.
வெட்பாலை இலைகளைக் கசக்கினால் அவை கருநீல நிறமாக மாறும். இந்தச் சாறு இதனால் தான் ஒரு இயற்கையான ஹேர் டையாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் ஹேர் டை செய்ய வெட்பாலை இலைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும். இதை ஏழு நாட்களுக்கு காலை முதல் மாலை வரை வெயிலில் வைக்கவும். அவ்வப்போது மெதுவாகக் கலக்கிவிடவும்.
ஏழாம் நாளில், எண்ணெயின் நிறம் தானாகவே கருநீல நிறமாக மாறியிருக்கும். இதுவே வெட்பாலை எண்ணெய். இந்த எண்ணெயைக் காய்ச்ச வேண்டிய அவசியமில்லை.
சூரிய ஒளியிலேயே நிறமாற்றம் நடைபெறும். எந்தவித ரசாயனக் கலப்படமும் இன்றி இயற்கையான முறையில் இந்த எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |