விஜயின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர் தானாம்! அவரே வெளியீட்ட வீடியோ
விஜயின் அடுத்த திரைப்படமான தளபதி 68 ஐ பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க போவதாக வீடியோ காட்சி ஒன்று பகிரப்பட்டுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் தளபதியாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் சமிபத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஜனனி என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில் இவரின் அடுத்த திரைப்படம் யார் இயக்குவார் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.
அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்
அந்த வகையில் விஜயின் டுவிட்டர் பக்கத்தில் இதற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், வெங்கட் பிரபு இயக்குவதாகும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார் என்றும் அந்த வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தளபதி இரண்டாவது தடவையாக கலம் இறங்குகிறார்.
இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.