லியோ படத்தில் நடித்து விட்டேன்.. டுவிட்டரில் போஸ்ட்டு போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரபலம்!
லியோ படத்தில் நடித்தது பற்றி பிக்பாஸ் ஜனனி ஒரு டுவிட்டொன்றை பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.
இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் தான் இவர் ரீல்ஸில் பிரபல்யமடையவும் பிக் பாஸ் சீசன் 6 ற்கு செல்லவும் உதவியாக இருந்தது. பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது.
அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
வியக்க வைக்கும் டுவிட்டர் பதிவு
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி லியோ திரைப்படத்தில் நடித்தது பற்றி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், லியே படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி, மேலும் விஜய் சார் ரொம்ப முக்கியமானவர் எனக்கு..” என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து லியோ படத்தில் ஜனனி நடித்தது ரசிகர்கள் மத்தியில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதுடன் இதனை பார்த்த ரசிகர்கள்,“ லியோ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தீர்கள்.” என கேள்விகளுக்கு மேல் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
Very Happy to be associated with the most expected project ... #Leo ...that too as an ACTOR ?❤Thank you so much dear @Dir_Lokesh sir for this opportunity !! And sharing screen space with our one and only thalapathy @actorvijay Sir will always be very very special to me ❤️❤️❤️ pic.twitter.com/2mocpvwbyT
— Janany (@Jananykunaseel) May 17, 2023