இனிப்பு மட்டுமல்ல....சுகர் நோயாளிகளுக்கு இந்த உணவுகளும் ஆபத்தானது? இனி அறவே தொட வேண்டாம்!
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது நாம் பல முறை அறிவுருத்தும் விடயம்.
இனிப்பு உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
அதேபோல சில உணவுகள் ரத்த சக்கரை அளவை திடீரென்று அதிகரிக்க செய்து விடும்.
அப்படியான 5 உணவுகள் குறித்து பார்க்கலாம். அவற்றை நீரிழிவு நோயாளிகள் முழுவதுமாக தவிர்ப்பது நல்லது.
பொறித்த உணவுகள்
பொறித்த உணவுகளில் டிரான்ஸ் ஃபேட் உள்ளது. இதனால் பல புதிய நோய்களுக்கு காரணியாக உள்ளது. மேலும், பொறித்த உணவுகளில் கலோரி சத்து மிகுதியாக உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
உலர் பழங்கள்
பழங்களாக சாப்பிடும்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தருகின்றது. உலர் பழங்களில் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
ஜூஸ்கள்
சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்ளும்போது சர்க்கரை சத்து உடனடியாக ரத்தத்தில் கலக்க தொடங்கி விடுகிறது.
இதை உடனே தவிர்க்க வேண்டும். பழங்களிலும் எல்லா பழங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது இல்லை. எனவே மருத்துவ ஆலோசனைகளுடன் பழங்களை அளவாக எடுத்து கொள்ளுங்கள்.
மாவுப்பொருள்
மாவில் தயாராகும் புரோட்டா, பிரெட், ரோட்டி போன்ற உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
இந்த உணவுப் பொருள்களில் நார்ச்சத்து குறைவு. இது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
இனிப்புகள்
இனிப்புகளை எடுத்து கொள்ளும் போது திடீரென்று ரத்தசக்கரை அளவு அதிகரித்து விடும். இனிப்பு உணவுகளை முழுமயாக தவிர்த்து விடுங்கள்.
நாம் சாதாரணமாக சாப்பிடும் காய்கரிகளில் கூட இனிப்பு உள்ளது.
அதுவே உடலுக்கு தேவையான சத்தை கொடுத்து விடும். எனவே ரத்தசக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இனிப்பை தவிர்ப்பது மிகவும் நல்லது.