mushroom pulao:வெறும் பத்தே நிமிடத்தில் மதிய உணவு தயாரிக்கணுமா? மஷ்ரூம் புலாவ் இப்படி செய்ங்க
பொதுவாகவே இல்லத்தரசிகளை பொருத்தவரையில் தினசரி மூன்று வேளை உணவு சமைக்க வேண்டியது அவசியமாகின்றது.
அப்படி மதிய உணவு தயாரிப்பதற்கு கடினமாக உணரும் சமயங்களில் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் அசத்தல் மஷ்ரூம் புலாவ் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான்: 250 கிராம்
பன்னீர்: 250 கிராம்
பச்சை மிளகாய்: 6-10
அரிசி: 2 கப்
இலவங்கப்பட்டை: நறுக்கியது
கிராம்பு: 4-6
பாலக் இலைகள்2
இஞ்சி பூண்டு பேஸ்ட்: 2 தே.கரண்டி
பூண்டு 1 தே.கரண்டி
நெய்: 1 தே.கரண்டி
எண்ணெய்: தேவையான அளவு
செய்முறை
முதலில் 30 நிமிடங்கள் வரையில் ஊற வைத்த அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வெங்காயம், கேப்சிகம், காலிஃபிளவர் மற்றும் காளான் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பன்னீரையும் சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்ர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, உருகியதும் கிராம்பு, இலவங்கப்பட்டை துண்டுகள் மற்றும் பாலக் இலைகளை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக மாறும் வரையில் வதக்கிய பின்னர் அதனுடன் பன்னீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பச்சை மிளகாய், குடமிளகாய், காலிஃபிளவர் மற்றும் காளான் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட் பாத்திர்ததை மூடி வேகவிட வேண்டும்.
இந்த காய்கறிகள் நன்றாக வெந்து, மென்மையாக மாறிய பின்னர், அதனுடன் வேக வைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால், அவ்வளவுதான் அசத்தல் சுவையில் காளான் புலாவ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |