Vastu tips: வீட்டில் நிம்மதி இல்லையா? அப்போ இத அடிக்கடி செய்ங்க

DHUSHI
Report this article
பொதுவாக வீடுகளில் பிரச்சினை வரும் பொழுது அனைவரும் கூறுவது ”வீட்டின் வாஸ்து சரியில்லை..” என்பது தான்.
ஆம், வாஸ்து வீட்டிற்க்கான நுண்ணறிவுகளை வழங்கி, வீட்டின் அமைதியை நிலைக்கச் செய்யும். நேர்மறையான ஆற்றல்கள் வீட்டில் அதிகமாக இருப்பதால் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
நாம் அனைவரும் வெளியில் எங்கு சென்று என்ன செய்தாலும், கடைசியாக வந்து சேர்வது வீடு தான். எனவே ஒரு வீடு கட்டும் முன்னர் அதன் வாஸ்து விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம் என சாஸ்த்திரம் கூறுகிறது.
வாஸ்துப்படி, வெளியில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுது நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில விடயங்களை கடைபிடிப்பது கட்டாயம்.
அந்த வகையில், வீட்டின் நிம்மதியை நிலைக்கச் செய்யும் வாஸ்து குறிப்புக்கள் என்னென்ன என்பதனை எமது பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து குறிப்புகள்
1. முதலாவதாக வீடு எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
2. நெகட்டிவ் வைப்ரேஷன்கள் அதிகரிக்கும் பொழுது நிம்மதி இருக்காது. தேவையில்லை என முடிவான எதையும் வாழ்க்கையிலும், வீட்டிலும் வைத்திருக்காதீர்கள்.
3. வாஸ்து ரீதியாக வீட்டிற்குள் சூரிய வெளிச்சம் வர வேண்டும். சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் வராதபடி வீடு கட்டப்பட்டிருந்தால் உங்களின் நிம்மதி வீணாகி விடும். இதனால் தம்பதிகளுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
4. சூரிய ஒளி படும் இடத்தில் கண்ணாடிகள் அல்லது கண்ணாடி ஜன்னல்கள் இருக்க வேண்டும். இது உங்களின் மனநிலையில் தாக்கம் செலுத்தும். பகல் வேளைகளில் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து சூரிய ஒளி வீட்டிற்குள் வருமாறு மாற்றி அமைக்க வேண்டும். இப்படி செய்தால் நிம்மதி கிடைக்கும்.
5. வீட்டிற்கு உள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும் பசுமையான சின்ன சின்ன செடி, கொடிகளை வளர்க்க வேண்டும். காற்றை சுத்தப்படுத்தி, மனதையும் அமைதியாக வைத்திருக்கும்.“பசுமை” என்பது மங்களகரத்தை குறிப்பது ஆகும்.
6. வீட்டில் மரம், செடி, கொடிகள், மணம் மிகுந்த பூக்களை கொண்ட செடிகளை வளர்க்க வேண்டும். இது வீட்டிற்குள் செழிப்பை உண்டு பண்ணும். உயிர் சக்தியை ஊக்குவிக்கும் பொழுது குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).