பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சேர்க்கை- ஏப்ரலில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்
வேத ஜோதிடத்தின்படி, கர்மத்தை அளிக்கும் சனி பகவான் குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் ராசி, நட்சத்திரத்தை மாற்றுவார். அப்படி மாற்றும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளிலும் தாக்கம் இருக்கும்.
இதன்படி, தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே போன்று பூரட்டாதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.
சனி பகவான் குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிப்பதால் குறிப்பிட்ட சிலரின் வாழ்க்கை மாத்திரம் சிறப்பாக இருக்கும். எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் தேதி புத்திகாரகனான புதனும் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி- புதன் சேர்க்கை இடம்பெறவுள்ளது.
அப்படியாயின், சனி- புதன் சேர்க்கையால் அதிர்ஷடம் கிடைக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. ரிஷபம்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்கள் தொழிலில் பலன் பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- உறவில் பயணங்கள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
- எந்தவித பிரச்சினை வந்தாலும் அதனை தனியாளாக சரிச் செய்யும் ஆற்றல் இருக்கும்.
- மாணவர்களாக இருப்பவர்கள் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
- கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
2. மிதுனம்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கடின உழைப்பின் பலன் கிடைக்கும்.
- சனியால் ஆசிர்வாதிக்கப்படுவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
- நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும்.
- புத்திசாலிகளாக இருப்பீர்கள்.
- வேலைகளை கவனமாக செய்ய வேண்டும்.
3. துலாம்
- பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் துலாம் ராசியில் பிறந்தவர்கள் நிலுவையில் வைத்திருந்த வேலைகளை செய்வார்கள்.
- பணியிடத்தில் நிறைய பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- எதிரிகளின் திறம்பட பதிலடிக் கொடுப்பீர்கள்.
- சோம்பேறித்தனத்தை கைவிட்டால் நிறைய நன்மைகள் பெற வாய்ப்பு உள்ளது.
- கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
- தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
