என்ன கஷ்டங்கள் இருந்தாலும் இந்த செடிகள் வீட்டில் இருந்தாலே போதும்
பொதுவாக வீடுகளில் ஆன்மிகம் என்பதனை முக்கியமாக கடைப்பிடிப்பார்கள்.
வீட்டில் நடக்கும் நல்ல விடயங்கள் கெட்ட விடயங்கள் என அனைத்திலும் இந்த ஆன்மிகம் இருக்கிறது.
அந்த வகையில் வீட்டிற்கு முன்னாள் வளர்க்கும் ஒவ்வொரு செடிகளுக்கு ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றது.
வாஸ்து முறைப்படி சில செடிகள் வளர்ப்பதால் பண பிரச்சினை, வீட்டில் தவிர்க்க முடியாத சில விடயங்கள் சரியாகும் என சிலர் நம்புகிறார்கள்.
இதன்படி, வாஸ்து முறைப்படி என்ன என்ன செடிகள் வளர்க்க வேண்டும்? அதன் பலன்கள் என்ன? என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்
1. வாடாமல்லி
பொதுவாக வீடுகள் என்றால் அதில் நேர்மறையான சக்திகள் மற்றும் எண்ணங்கள் நிறைந்திருப்பது அவசியம் . இதனால் எப்போது வாடாமல் பூக்களை கொண்டுள்ள வாடாமல்லி செடியை வீட்டில் வளர்க்க வேண்டும்.
2. கோழிக்கொண்டை
நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும் செடிகளில் கோழிக்கொண்டையும். வாடாமல்லியும் உள்ளடங்குகின்றன.
இந்த செடிகள் கண்டிப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். மேலும் கோழிக்கொண்டை செடியை சுப வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இதனால் வீட்டிற்கு நல்லது கிடைக்கும்.
3. சங்கு பூ
பொதுவாக கிராமங்களில் அதிகமாக வளரும் பூக்களில் சங்கு பூவும் ஒன்று. இந்த பூக்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும்.மேலும் சங்கு பூக்கள் சிவன் மற்றும் விநாயக பெருமானுக்கு உகந்த மலராகும்.
4. துளசி
வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய செடிகளில் ஒன்று தான் துளசி. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் எதிர்மறையான சக்திகள் வீட்டில் இருக்காது. அத்துடன் வாஸ்து முறைப்படி வீட்டில் துளசி செடி தாராளமாக வளர்க்கலாம்.
5. பொன் அரளி
மஞ்சள் நிறத்தில் இருக்கும் பொன் அரளி பூ செடியை வீட்டில் வளர்ப்பதால் கஷ்டங்கள் மறைந்து மங்களம் உண்டாகும். மேலும் செழிப்பும் அதிகரிக்கும்.