மருதாணி செடிகளை வீட்டில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் அதிகமான தோஷங்கள், திருஷ்டிகள் என நிறைய விடயங்கள் இருக்கும்.
இது போன்ற விடயங்கள் வீட்டில் நடக்கக் கூடாது என வீட்டில் சில செடிகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள்.
அந்தவகையில், வீட்டில் மருதாணி செடி இருந்தால் அந்த வீட்டில் துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது என எமது முன்னோர்கள் கூறுவார்கள். இது மட்டுமல்ல சில வகையான பூச்சிகளும் வீட்டின் அருகில் நெருங்காது.
அந்தவகையில் மருதாணி செடியில் இருக்கும் ஆன்மீக குறிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மருதாணி செடிகளை வீட்டில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தூபம் காட்டுவார்கள். இவ்வாறு காட்டும் போது அந்த நெருப்பில் மருதாணி இலைகளை போட்டு தூபம் காட்ட வேண்டும். இவ்வாறு காட்டுவதால் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தால் அது நீங்கி வீடு சுத்தமாகும்.
வீட்டில் மருதாணி இலைகள் இல்லாத பட்சத்தில் அதன் காய்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. இந்த விதைகள் தாந்திரீக வித்தைகளில் சிறப்பு வாய்ந்தது.
தோஷங்கள் இருந்தால் இதனை எவ்வாறு சரிச் செய்வது என்ற பயம் இருக்கும். ஆனால் மருதாணி இலைகள் இதனை கூடிய விரைவில் சரியாக்கி விடும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் இந்த முறையை கையாளலாம். வீட்டின் முன் மருதாணி செடிகளை நாற்றி அதனை பராமரித்தால் மட்டும் போதுமானதாகும்.