வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடிகளை வீட்டில் வளர்க்ககூடாதாம்... மீறினால் ஏற்படும் ஆபத்து
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில தாவரங்களை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், சில சில செடிகளை வளர்ப்பது ஆபத்தை ஏற்படுத்து.
அந்த வகையில் என்னென்ன செடிகளை வளர்க்ககூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
கள்ளிச்செடி
வாஸ்துப்படி கள்ளிச்செடி தீய சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதிலுள்ள முட்கள் தீய ஆற்றலை கவர்ந்து இழுக்கிறது.
இதனால், வீட்டில் அமைதியின்மை, சண்டை போன்ற தீய நிகழ்வுகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பருத்தி செடி
பருத்தி செடியை வளர்ப்பதால், உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும். மேலும் இவை வீட்டிற்கு சில கெடுதல்களை அளிக்கலாம். போன்சாய் செடி
போன்சாய் செடி
பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் வாஸ்துப்படி இதை வீட்டில் வளர்க்ககூடாது எனக்கூறப்படுகிறது. இந்த செடியானது எவ்வாறு வளர்ச்சி குன்றி காணப்படுகிறதோ அதேபோல வீட்டிலுள்ளவர்கள் தொழிலும் வளர்ச்சியடையாமல் போய்விடும் என்று கூறப்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் குட்பை சொல்லனுமா? அற்புதம் செய்யும் ஒரே காய்
புளியமரம்
வாஸ்துப்படி புளிய மரத்தை வீட்டின் பக்கத்திலோ அல்லது வீட்டிற்குள்ளேயோ வைக்க கூடாது. இது அதிகப்படியான எதிர்மறை ஆற்றலை உள்ளிழுத்து வீட்டின் அமைதியை குலைக்கிறது.