மணி பிளாண்ட் செடியை மறந்தும்கூட இந்த திசையில் வைக்காதீர்கள்!
அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டுமே என்பதே ஆசையாக இருக்கும், வீட்டின் சமையலறை முதல் குளியலறை வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டுபவர்கள் ஏராளம்.
அனைத்துமே சூப்பராக அமைந்த பின்னர், வீட்டில் எப்போது பாசிட்டிவ் எனர்ஜி இருக்க வேண்டும் என நினைப்போம், எதிர்மறை ஆற்றலை ஈர்க்காமல் இருக்க எந்தவொரு காரியத்தை தெரிந்தும் தெரியாமலும் கூட செய்துவிடக்கூடாது.
பாசிட்டிவ் எனர்ஜி என்றவுடனும், பணக்கஷ்டம் வராமலும் இருக்க முதலில் நம் நினைவுக்கு வருவது மணி பிளாண்ட் செடியை வளர்க்க வேண்டும் என்பதே.
இந்த பதிவில் மணி பிளாண்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது, எப்படி வளர்த்தால் செல்வம் கொழிக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மணி பிளாண்ட் ஏன் வளர்க்க வேண்டும்?
வாஸ்து முறைப்படி பாசிட்டிவ் எனர்ஜியை வழங்கும் மணி பிளாண்ட் செடிகள் அதிர்ஷ்டம், உடல்நலம் மற்றும் செழுமை என இவை அனைத்தையுமே கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
இதனை நம் வீடுகளிலோ அல்லது அலுவலகங்களிலோ வளர்க்கலாம், நம் வீட்டில் மணி பிளாண்ட் செடிகளை வளர்ப்பதால் வீட்டில் செல்வ செழிப்பு நிலைப்பதுடன் பணம் தொடர்பான பிரச்சனைகள் வராது என்பது நம்பிக்கை.
காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுக்களை நீக்குவதுடன் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வழிவகுக்கிறது.
மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதென நீங்கள் முடிவெடுத்து விட்டால் அதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம்.
எந்த திசையில் வளர்க்கலாம்?
தென்கிழக்கு திசையே மணி பிளாண்ட் வளர்ப்பதற்கு சிறந்தது என சொல்லப்படுகிறது, இந்த திசையே விநாயகருக்கு உகந்தது என்பதால் அதிர்ஷ்டம் பெருக தென்கிழக்கு திசையில் வளர்க்க வேண்டும்.
இந்த திசையில் வைப்பதால் கெட்ட சக்திகள் அகற்றப்பட்டு நன்மைகள் வந்து சேரும்.
வடக்கு திசை வீடு
ஒருவேளை உங்கள் வீடு வடக்கு பக்கம் நோக்கி இருந்தால், வீட்டின் நுழைவே மணி பிளாண்ட் வளர்ப்பதற்கு சிறந்ததாகும்.
இப்படி செய்வதால் குடும்ப உறுப்பினர்கள் வருமானம் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
படுக்கையறை
படுக்கையறை வைப்பதாக இருந்தால் உங்களது படுக்கைக்கு வலது அல்லது இடது புறத்தில் மணிபிளாண்டை வைத்து விடுங்கள்.
இப்படி செய்வதால் கணவன்- மனைவிக்குள் வீணான சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி இருக்கலாம், குறிப்பாக உறக்கம் தொடர்பான பிரச்சனைகள் இல்லாமலும் இருக்கும்.
எங்கு வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, எதிர்மறை திசையான வடகிழக்கு திசையில் மணி பிளாண்டை வைக்கக்கூடாது.
மேலும் கிழக்கு- மேற்கு திசையில் வைத்தால், குடும்பத்தில் மோதல்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இதுபோன்று வீட்டின் கூர்மையான மூலைகளிலும் மறந்தும் கூட மணி பிளாண்டை வளர்க்க வேண்டாம், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டின் தோட்டத்திலும் வைத்து வளர்க்க வேண்டாம்.
Images: Firstcry Parenting
எப்படி வளர்க்க வேண்டும்?
வீட்டிற்கு வெளியே வளர்ப்பதை விட, வீட்டுக்குள்ளேயே வளர்த்தால் தான் செல்வம் கொழிக்கும், வெளியில் வைத்து வளர்ப்பதாக இருந்தால் நேரடியாக சூரிய ஒளி விழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும், காய்ந்த இலைகளை அவ்வப்போது கத்தரித்து விடுங்கள்.
இலைகள் பசுமையாக இருந்தால் மட்டுமே நாம் நினைத்தது நிறைவேறும், ஏனெனில் வாடிய இலைகள் எதிர்மறையான ஆற்றலை கொண்டிருக்கும், இதேபோல் மணி பிளாண்ட் இலைகளை தரையில் படரவிடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு முறை தண்ணீர் விடுவதும் அவசியம்.
வாஸ்து சாஸ்திரப்படி மணி பிளாண்ட் செடியை உங்களது வீடுகளில் வளர்த்தால் செல்வ வளம் பெருகும்.