விஜயகுமார் குடும்பத்துடன் சேர்ந்துட்டாரா வனிதா.. மறைமுகமாக மகளின் காதலை வெளிப்படுத்திய பதிவு!
மறைமுகமாக மகளின் காதலை வெளிப்படுத்தி நடிகை வனிதா விஜயகுமார் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
குடும்பத்துடன் சேர்ந்துட்டாரா வனிதா
இந்த நிலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வனிதா, அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மகள் ஜோவிகாவிற்கு பின்னால் விஜயகுமார் என்ற பெயரை சேர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வீட்டீர்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
ஜோவிகா விஜயகுமாரின் புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு கீழ், “நாம் காதலித்த 90களின் காதல் கதைகள் எங்கே…. சீக்கிரம் ஏதாவது அழகாக இருக்கும் என்று நம்புகிறேன்..” என மகளின் மறைமுக காதலை கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் சற்று குழப்பமடைந்துள்ளதுடன், “ வனிதா இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க..?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.