என்னால் பாத்ரூமில் கூட இருக்க முடியாது! நீண்ட நாட்களுக்கு பிறகு ஓபன் டாக் கொடுத்த வனிதா!
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் கிளாஸ்ட்ரோஃபோபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார்.
இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் கொடுத்தார்.
ஆனால் இவரால் கடைசி வரை வர முடியவில்லை பாதியில் எலிமினேட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார்.
எனக்கு நோய் இருக்கிறது..
இந்த நிலையில் சமிபத்தில் நடை பெற்ற நேர்காணல் ஒன்றில் இந்த நோய் குறித்து பேசியுள்ளார். அதில், “ எனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா நோய் பாதிப்பு இருக்கிறது.
இந்த விடயம் குடும்பத்தினருக்கு மட்டும் தான் தெரியும். இந்த நோயால் சிறிய இடங்களில் என்னால் அதிக நேரம் இருக்க முடியாது. உதாரணமாக லிப்ட், கழிவறை போன்ற இடங்கள்.
கேரவனில் கூட ரொம்ப நேரம் இருக்க முடியாது. உடை மாற்றி விட்டு விரைவாக வந்து விடுவேன். இந்நோய் பிக்பாஸ் சென்று போதும் இருந்தது. இதனால் அவதிப்பட்டேன்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,“ இது என்ன புது புரளியாக இருக்கிறது.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.