என் வாழ்க்கை இப்படி சீரழித்து இருப்பதற்கு அப்பா விஜயகுமார் தான் காரணம்... பகீர் குற்றத்தை கிளப்பிய வனிதா
வனிதா வாழ்க்கை வீணாகிப் போனதற்கு காரணம் என் அப்பா விஜயகுமார் தான் காரணம் என பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
வனிதா
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.
வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார்.
ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது. இப்போது யாரும் வேண்டாம் என்று ஒரு முடிவெடுத்து தனது இருமகள்களுடன் மட்டும் வாழ்ந்து வருகிறார்கள்.
வாழ்க்கை சீரழித்தது அப்பா தான்
இந்நிலையில், வனிதா அண்மைய பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையை சீரழித்தது என் அப்பாதான் என குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன் இந்த மாற்றத்திற்கு காரணம் என் அப்பா விஜயகுமார் தான். என் குடும்பத்தில் எல்லோரும் கவிதா, அனிதா, அருண், ப்ரீதா, ஸ்ரீதேவி என எல்லோரும் பெயர்களை குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என் பெயர் மட்டும் இருக்காது.
இதுபற்றிய ஒரு வீடியோவை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்தார்கள் இதை நான் மறுபடி மறுபடி என பத்துபதினைந்து தடவை நான் பார்த்தேன். இதில் அப்பா பிள்ளைகளைப் பற்றி பேசியிருப்பார் அதில் என்னைப் பற்றி பேசவே இல்லை இது எனக்கு கோபத்தைக் கொடுத்தேன்.
அதனால் நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால் அவர் சொன்ன ஒருவிடயத்தை மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண் குழந்தைகளில் நான் மட்டும் தான் அப்பாவின் பேச்சைக் கேட்கவில்லை அவருக்கு கீழ்படியாமல் இருந்தது உண்மை.
ஆனால் என் வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தவறான அறிவுரைகளை மட்டும் தான் சொல்லியிருக்கிறார். அதை நான் உணர்ந்துக் கொள்ளவும் தான் அவரின் பேச்சைக் கேட்கவில்லை. அப்பா சொன்னதை மட்டும் கடைப்பிடித்ததால் என் வாழ்க்கையே குலைந்திருக்கும் தன்னம்பிக்கைதான் இப்போது எனக்கு பலம்.
என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் கூற முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்ப திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அந்த பெயரை நான் மாற்ற மாட்டேன் என வனிதா கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |