அம்மா மஞ்சுளாவை கண்முன் கொண்டு வந்த வனிதா! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
குடும்பத்துடன் என்ன தான் மனஸ்தாபம் இருந்தாலும் வனிதா விஜயகுமார் அவ்வப்போது அம்மா மஞ்சுளா பற்றி உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வரும் வனிதா தற்போது தன்னுடைய அம்மா பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
சிம்புள் புடவை, டிசைனர் ஜாக்கெட், நெற்றில் வட்ட பொட்டு, முகத்தில் மாற புன்னகை என அம்மா மஞ்சுளாவையே நேரில் பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மார்டன் உடையில் மட்டுமே அதிகமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த வனிதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு புடவையில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
மஞ்சள் நிற ஜாக்கெட், புளூ கலர் புடவை சகிதமாக செம்ம சிம்பிளாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனம் கவர்ந்துள்ளார் வனிதா.
You May Like This Video