வனிதா அம்மா மஞ்சுளாவின் கடைசி ஆசை! விஜயகுமார் திட்டம் போட்டு ஏமாற்றினாரா? பகீர் கிளப்பிய வனிதா
நடிகை வனிதாவின் அம்மா மஞ்சுளா இறப்பதற்கு முன் மருத்துவமனையில் தன்னிடம் கூறிய இறுதி ஆசை குறித்து பகிர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வனிதா கூறியுள்ளதாவது,
தன்னை மகள் இல்லை என அம்மா - அப்பா கூறினாலும், பிரச்சனை நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் இணைந்துவிட்டோம்.
அப்படியே தந்தையும் சமாதானம் ஆகிவிட்டார். எங்கள் பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக பேட்டி ஒன்றில் கூட நான் கூறினேன்.
பகீர் கிளப்பிய வனிதா
திடீரென்று தன்னுடைய அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் இருந்தார்.
பிறகு வழக்கறிஞரை கூப்பிட சொன்னார். அதே போல் வீடியோ எடுக்குமாறும் எண்ணிடம் கோரிக்கை விடுத்தார்.
சொத்துகள் அனைத்திலும் உனக்கும் பங்கு இருக்க வேண்டும் என கூறினார். நான் நீ தான் முக்கியம், என்னை ஏமாற்றுகிறார்கள் என்றால் நன்றாக இருக்கட்டும் என்று தெரிவித்தேன்.
விஜயகுமார் திட்டம் போட்டு சொத்துக்களை ஏமாற்றினாரா?
அதன் பிறகு தான் அப்பா விஜயகுமார் , உள்ளிட்ட அனைவருமே மருத்துவமனை வந்தார்கள். அம்மா இறக்க போகிறார் என்று மருத்துவர் கூறினார்.
தன்னுடைய அப்பாவிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று அம்மா கடைசியாக தெரிவித்தார். அம்மா உயிருடன் இருக்கும் போது இருந்த அப்பா வேறு தற்போது இப்படி மாறிவிட்டார் என்று வனிதா கூறி புதிய புரளியை கிளப்பியுள்ளார்.
விஜயகுமார் திட்டம் போட்டு வனிதாவின் சொத்துக்களை ஏமாற்றியது போல கூறியுள்ளார்.
அம்மா கூறியதாக வனிதாவே இப்படி பேசி தந்தையுடன் சேர திட்டம் போடுவதாக சில நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
இதேவேளை, திடீரென்று இவ்வளவு வருடங்கள் கழித்து இப்படி ஒரு விடயத்தினை அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.