அதிக குடிப்பழக்கம் தான் காரணம்...! இரங்கல் கூட தெரிவிக்காத முன்னாள் மனைவி!
வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் இன்று உயிரிழந்தார் அவரின் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
மரணத்திற்கான காரணம்
அடுத்தடுத்து திருமணங்கள் செய்து பிரபலமான வனிதா விஜயகுமார் இறுதியாக பீட்டர்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவரிடம் இருந்தும் பிரிந்து தனியாக வாழந்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் வனிதாவின் மூன்றாவது கணவர் இன்று உயிரிழந்திருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். மூன்றாவது கணவரான பீட்டர்பால் உயிரிழந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது பீட்டர்பால் அதிக குடிப்பழக்கம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது தான் இன்று அவர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
பீட்டர்பால் அதிகமாக குடிப்பிக்கம் கொண்டிருந்ததால் அவரது கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டு இறுதியில் அல்சர் வரை சென்று பல சிகிச்சைகளை எடுத்து வந்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே போய் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்.
இவ்வாறு உயிரிழந்த வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர்பாலின் மரணத்திற்கு கூட வனிதா செல்லவில்லை என்று ரசிகர்களும் இணைவாசிகளும் கமெண்டுகளை அள்ளி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.