உடல்நிலை மோசமாகி கஷ்டப்பட்ட நடிகைக்கு உதவிய சமந்தா.. அவரே கூறிய நெகிழ்ச்சி தகவல்!
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணவர் நாக சைதன்யாவை பிரிந்தார். இவரின் விவாகரத்து சம்பவம் இந்திய சினிமா ரசிகர்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தா அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட நடிகைக்கு உதவி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
அந்த நடிகையின் பெயர் தேஜஸ்வி மாதிவாடா. இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
இதுகுறித்து, தேஜஸ்வி மாதிவாடா தெரிவிக்கையில், “சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன்.
சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். தற்போது எனக்கு டிபி நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.
அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார் என தெரிவித்துள்ளார்.