நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறந்தது எப்படி? யார் காரணம்? வெளியான பல உண்மைகள்
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்று சமீபத்தில் எச்.ராஜா தவறுதலாக கூறி பின்பு மன்னிப்பு கேட்டது யாவரும் அறிந்த விடயமே.
தற்போது சிவகார்த்திகேயனின் தந்தை எவ்வாறு உயிரிழந்தார் என்பதும், அவர் உயிரிழந்ததற்கு யார் காரணம் என்பதை நக்கீரன் கோபால் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் தனது மகளின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுப்பதற்கு சிவகார்த்திகேயனின் வீட்டிற்கு அவரது தந்தை தாஸை காண்பதற்கு சென்றுள்ள தருணத்தில், சிவகார்த்திகேயனைச் சந்தித்து தாஸ் மகனா நீ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதற்கு சிவகார்த்திகேயன் ஆமா என்று பதில் கூறியவாறு, அவரது தந்தையுடன் தனக்கு ஏற்பட்ட நட்பினையும், அவரது நேர்மை என்ன என்பதையும், அவர் உயிரிழப்பிற்கு யார் காரணம் என்று பல விடயங்களை பேசியதை தற்போது வெளியிட்டுள்ளார்.
வீரப்பன் உயிரோடு இருந்த தருணத்தில் இருமாநில அரசு சார்பாக வீரப்பனிடம் தூதுவராக சென்றவர் தான் கோபால் என்பது பலரும் அறிந்ததே.
கடந்த 2000ம் ஆண்டில் கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக விளங்கிய ராஜ்குமார், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றால் கடத்தப்பட்டார்.
அப்பொழுது அவரை விடுவிப்பதற்கு வீரப்பன் வைத்த கோரிக்கை என்னவெனில், திருச்சி சிறையில் இருக்கும் தன்னுடைய ஆட்கள் ஐந்து பேரை விடுதலை செய்து ஒப்படைக்க வேண்டும் என்பதை அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் முதல் கோரிக்கையாக வைத்துள்ளார்.
அத்தருணத்தில் திருச்சி சிறையில், உயர் அதிகாரியாக இருந்தவர் தான் சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ். இதனால் அவ்வப்போது சிறையில் இருப்பவர்களை சந்திப்பதற்கு சென்று வரும் போது நக்கீரனுக்கு அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது சிவகார்த்திகேயனைக் குறித்து கவலை தெரிவித்த தாஸ், பல குரல்களில் பேசுவதாகவும், அதற்காக படிப்பினை விட அதிக நேரம் செலவிடுவதாகவும் படிப்பு முடிந்ததும் ஏதாவது ரிவியில் வேலைக்கு சேர்த்துவிடுமாறும் நக்கீரனிடம் கூறியுள்ளார்.
பின்பு 2001ல் ஜெயலலிதா ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், நக்கீரன் கோபால் மற்றும் அவரது சகோதரர்கள் மீதும் கொலை மற்றும் கடத்தல் வழக்கினை போட்டதால் தலைமறைவாக வாழ்ந்து உள்ளனர்.
நக்கீரன் தலைமறைவாக இருந்த நேரத்தில், சிவகார்த்திகேயன் தந்தை தாஸ் கோயமுத்தூர் சிறைச்சாலை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்தருணத்தில் நக்கீரனுக்கு போன் மூலமாக தகவல் வந்துள்ளது. தாஸ் பணியில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பொலீஸ் உயர் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு மரணித்திருப்பது நக்கீரனுக்கு தெரியவந்துள்ளது. கலைஞர் கருணாநிதி, நக்கீரன், திருச்சி சிறையில் இருந்த அந்த வீரப்பனின் 5 தீவிரவாதிகள் அனைவரும், வீரப்பனுடன் சேர்ந்து நடிகர் ராஜ்குமாரை கடத்தக் கோரியதாக புகாரை புதிய அரசு திருப்பிவிட நினைத்துள்ளது.
அதுமட்டுமின்றி கலைஞர் மற்றும் நக்கீரன் வீரப்பனின் கூட்டணி என்று தாஸிடம் பலமுறை எழுதி கொடுக்குமாறு ஜெயலலிதாவைச் சேர்ந்த பொலிசார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
நேர்மையாக பொலிஸ் அதிகாரி இருக்கும் தாஸை இவ்வாறு எழுதி கொடுக்க, ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவருக்கு மன அழுத்தம் ஏற்படவே, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்.
அவர் நினைத்திருந்தால், அன்று ஒரு கையெழுத்து மட்டும் போட்டு அவர் தப்பித்திருக்கலாம். ஆனால் நேர்மையாக செயல்பட்டு, தங்களைக் காப்பாற்றுவதற்கு, ஏற்பட்ட நெருக்கடியே அவரது மாரடைப்பிற்கு காரணம் என்று கூறியுள்ளார் நக்கீரன்.
தாஸ் இறப்பிற்கு காரணம் ஜெயலலிதா, அவருடன் இருந்த பொலிஸ் அதிகாரிதான். தாஸ் சிவகார்த்திகேயனுக்காக நக்கீரனிடம் வேலை கேட்டதையும், இன்று அவர் இருக்கும் உயரத்தினையும் பெருமையாக கூறியுள்ளார்.
மேலும் தாஸ் இறந்தது தன்னைக் குற்றப்படுத்தி தானே எழுதி கேட்டார்கள், என்னை காப்பாற்றுவதற்காகவே தான் உயிரைவிட்டார் என்று குற்றஉணர்ச்சியாக இருந்தது என்று சிவகார்த்திகேயனிடம் நேராகவே கூறியுள்ளார்.
இவற்றினை அறியாத எச்.ராஜா இவ்வாறு கூறி சர்ச்சையினைக் கிளப்பியுள்ளார்.