கொள்ளை அழகில் ரசிகர்களை வசீகரிக்கும் வாணி போஜன்... வைரலாகும் காணொளி
நடிகை வாணி போஜன் பிங்க் நிற ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
வாணி போஜன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மாயா' சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை வாணி போஜன்.
அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இல்லதரசிகளின் மனம்கவர்ந்த 'தெய்வமகள்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.
சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த வாணி, 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு 'ஓ மை கடவுளே' திரைப்படம் இரண்டாவது நாயகியாக நடித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
இந்த திரைப்படம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் திரும்பு முனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னர் லாக் அப், மலேசியா டூ அமீனீஷியா, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் அஞ்சாமை, போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக இருக்கும் வாணி அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வித்தியாசமான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பது வழக்கம்.
இந்நிலையில் இவர் பிங்க் நிற புடவையில் கொள்ளை அழகில் ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
