ஒற்றை ரோஜாவுடன் வெட்கத்தில் சிவந்த ராஷ்மிகா மந்தனா... கொடுத்தது யார் தெரியுமா?
நடிகை ராஷ்மிகா மந்தனா கையில் சிவப்பு ரோஜாவுடன் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக முதல் நிலை வகிக்கின்றது.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.
இந்நிலையில் தற்போது கையில் சிவப்பு ரோஜாவுடன் புகைப்படம் வெளியிட்டுள்ள ராஷ்மிகா, அவரே தனக்கு ரோஸ் கிப்ட் ஆக கொடுத்துக்கொண்டாராம்.
குறித்த புகைப்படத்துடன் "உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பதிவிட்டிக்கின்றார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
