Baakiyalakshmi: ஈஸ்வரியை நெருங்கவிடாமல் தடுக்கும் ராதிகா... பரிதவிக்கும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா, கோபியின் தாயை அருகில் கூட நெருங்கவிடாமல் சரியான பதிலடி கொடுத்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வரும் பாக்கியாவின் வீட்டில் தற்போது கோபி ராதிகாவுடன் தங்கியுள்ளார்.
இதற்காக பாக்கியா வாடகையையும் வசூலித்து வருகின்றார். இந்நிலையில், கோபியின் அருகில் ஈஸ்வரியை நெருங்கவிடாமல் ராதிகா தடுத்து வருகின்றார்.
வாக்கிங் செல்லும் இடம், மருத்துவமனை செல்லும் போது ஈஸ்வரியை தவிர்த்து சரியான பதிலடி கொடுத்துள்ள நிலையில், கோபியிடம் ஈஸ்வரி மருத்துவமனையில் என்ன கூறினார்கள் என விசாரித்துள்ளார்.
நீங்க அமைதியாக இருந்தால் உங்க பையன் அமைதியாக இருப்பான் என்று கூறி ஈஸ்வரியின் வாயை அடைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |