ஆஸ்துமாவுக்கு தீ்ர்வு கொடுக்கும் தேங்காய் புதினா சட்னி... எப்படி செய்வது?
தேங்காயுடன் புதினா கலந்து சட்னி செய்தால் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
சுவைக்காக மாத்திரமின்ன்றி புதினா இலையில் மருத்துவ குணங்கள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.
ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்துவதில் புதினா பெயர் பெற்றது.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா அருமருந்தாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட புதினா இலையை கொண்டு அசத்தல் சுவையில் அவ்வாறு புதினா தேங்காய் சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
புதினா இலைகள் -½ கப்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
பொட்டுக்கடலை - 2 தே.கரண்டி
தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
தாளிக்க தேவையானவை
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - 1 சிட்டிகையளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், புதினா, கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். குறைந்த வெப்பத்தில் அடிக்கடி கிளறிவிட வேண்டும்.
புதினா நன்றாக வதங்கியதும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து, வதக்கி வைத்த புதினா இலை மற்றும் இஞ்சி கலவையையும் சேர்த்து பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எடுத்து வைத்த எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் கடுகைப் போட்டு, பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்க்கவும், பின்னர் பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
பின்னர் சட்னியை இந்த கடாயில் ஊற்றி நன்கு கிளறினால் அவ்வளவு தான் ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் தேங்காய் புதினா சட்னி தயார். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |