ஆட்டுக்குட்டிகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பசுமாடு! நெகிழ்ச்சி சம்பவம்
நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனம். விவசாயியான இவர், தனது வீட்டில் பசு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் வளர்க்கப்படும் பசு ஒன்று அண்மையில் கன்று ஈன்றுள்ளது. அதேபோல், வீட்டில் வளர்க்கப்படும் ஆடு ஒன்றும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

இனப்பாகுபாடு பார்க்காத தாய்ப்பாசம்
இதற்கிடையே, பசியுடன் பால் குடிக்கச் சென்ற ஆட்டுக்குட்டிகளுக்கு பசுமாடு பால் கொடுத்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது கன்றுக்கு மட்டுமின்றி, ஆட்டுக்குட்டிகளுக்கும் பால் கொடுத்து தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது அந்தப் பசுமாடு.
பசுமாடு ஆட்டுக்குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் இந்த நெகிழ்ச்சியான காட்சியைக் காணும் அக்கம்பக்கத்தினர் வியப்புடன் ரசித்துச் செல்கின்றனர். விலங்குகளிடையே நிலவும் இந்த அன்பும் பாசமும் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |