viral video: பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து... எதிலிருந்து எடுக்கிறார்கள் தெரியுமா?
நபரொருவர் பாம்பை பிடித்து சரியாக இடத்தை நசிப்பதன் மூலம் நுட்பமான முறையில் விஷத்தை எடுக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தை ஆக்கிரதித்து வருகின்றது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். உலகிலேயே மிகவும் ஆபத்தான விலங்குகளில் பட்டியலில் பாம்புகளட முக்கிய இடம் வகிக்கின்றது. கொடிய விஷமுள்ள பாம்பு ஒருவரை கடித்தால் அவர் சில நிமிடங்களிலேயே இறக்க வாய்ப்புள்ளது.
அதனால்தான் பலரும் பாம்பை பார்த்தாலே அலறி நடுங்குகிறார்கள். எந்தெந்த பாம்பின் விஷம் வேகமாக மனிதனை முடமாக்கும் அல்லது கொல்லும் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
ஆனால் பாம்பின் விஷத்தை சேகரித்து பல்வேறு கொடிய நோய்களுக்கு மருந்துகளும் தயாரிக்கப்டுகின்றது.
வாத எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளிலும் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பக்க விளைவுகள் இல்லாமல் பாம்பு விஷத்தில் இருந்து வலி நிவாரணிகளை தயாரிக்கலாம்.
அதுமட்டுமன்றி விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில் பாம்பை பிடித்து சரியாக இடத்தை நசிப்பதன் மூலம் நுட்பமான முறையில் விஷத்தை சேகரிக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |