இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொத்தவரங்காய் துவையல்... எப்படி செய்வது?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்த நிறைந்த காய்கறி வகைகளுள் கொத்தவரங்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.
இதில் அதிகளவான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து இருப்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆஸ்துமா பிரச்சினையைக் குணமாக்கும் ஆற்றல் கொத்தவரங்காய்க்கு உண்டு. கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் செயற்படுகின்றது.
உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காயில் அதிகம் காணப்டுகின்றது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு வரபிரசாதமாக அமைகின்றது.
தினசரி வெறும் 10கிராம் அளவுக்கு கொத்தவரங்காய் எடுத்துக்கொண்டாலே போதும் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாக குறைவடையும்.
மேலும் இதில் செரிந்து காணப்படும் நார்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுப்பதுடன் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயை கொண்டு அசத்தல் சுவையில் எப்படி துவையல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
எண்ணெய்-2 தே.கரண்டி
உளுந்து-1 தே.கரண்டி
புளி-நெல்லிக்காய் அளவு
வரமிளகாய்-2
பச்சை மிளகாய்-1
தேங்காய்-1 கப்
உப்பு-1 தே.கரண்டி
கொத்தவரங்காய்-15
கொத்தமல்லி-சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து எண்ணெய் இல்லாமல் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துவிட்டு 1 தேக்கரண்டி உளுந்து சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி, வரமிளகாய் 2, பச்சை மிளகாய் 1, தேங்காய் 1 கப் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.
இறுதியில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் வதக்கிய பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் கொத்தவரங்காய் துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |