குழந்தைகளில் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் உளுந்து லட்டு
பொதுவாக நாம் உளுந்தைக் கொண்டு இட்லி, தோசை என பல உணவுகளை சமைத்து உண்பது வழக்கம் தான்.
அப்படி இன்று வழக்கத்திற்கு மாறாக உளுந்தைக் கொண்டு லட்டு செய்து சாப்பிட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை உடலுக்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.
உளுத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது அதனால் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலை இல்லாமலாக்குகிறது.
இப்படி பல நன்மைகளைக் கொண்ட உளுந்தில் எப்படி லட்டு செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முழு உளுந்து - 1 கப்
அரிசி - 2 கரண்டி
நெய் - 1 கரண்டி
முந்திரி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 3 கரண்டி
ஏலக்காய் தூள் - 1 கரண்டி
நெய் - 2 கரண்டி
செய்முறை
முதலில் நெய் சேர்த்து முத்திரி பருப்பை வறுத்துக் கொள்ளவும். பின்னர் உளுந்தையும் அரிசியையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
இவை இரண்டும் ஆறிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அரைத்த மாவில் வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து இன்னும் கொஞ்சம் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த மாவை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து வறுத்து வைத்துள்ள நெய் மற்றும் முந்தரி என்பவற்றை சேர்த்து கலக்கவும்.
எல்லாம் முடித்தவுடன் கையில் நெய் தடவிக் கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த உளுந்து லட்டு தயார்.