முந்திரியில் கொலஸ்ட்ரால் இருக்காம்...ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம் தெரியுமா?
முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும்.
சுவையாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.
நீரிழிவு நோயாளி வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடலாமா? எச்சரிக்கை....!
ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிட வேண்டும்?
தினசரி சரியான அளவில் நாம் முந்திரியை உண்பது முக்கியமாகும்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 முந்திரிகளை உண்ணலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே தினமும் அதிகமாக முந்திரி உண்பவர்கள் அதைக் கட்டுப்படுத்துவது நல்லது.
முந்திரியின் ஆரோக்கிய நன்மைகள்
- முந்திரி புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்டுள்ளது .
- முந்திரியில் உள்ள சத்துக்கள் காரணமாக அது பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுவுகின்றது.
- முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.
- முந்திரி பருப்பில் மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
- சிறுநீர்ப் பையில் அதிகளவு கொழுப்பு படிகங்கள் தங்குவதால் சிறுநீர்க் கற்கள் உருவாகிறது.
- முந்திரி பருப்பில் போதுமான இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது.
- அனிமியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
- இரும்புச் சத்து நரம்புகள், இரத்த குழாய்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
- முந்திரி பருப்பில் லுடின், ஜியாக்ஸிடின் போன்ற பொருட்கள் உள்ளன. இது கண்களில் உளள செல் பாதிப்பு, மாக்குலார் டிஜெனரேசன், கண்புரை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
முந்திரி பருப்பு பட்டர்
- 2 கப் முந்திரி பருப்பு
- எள் எண்ணெய் தேவைக்கேற்ப
- உப்பு சுவைக்கேற்ப
- பேரீச்சம் பழம் (விருப்பத்திற்கு ஏற்ப)
ஒரு நாள் மேயராக மாறிய பூனை... அமெரிக்காவில் நடந்த விசித்திரம்!
செய்முறை
அரைக்கும் மிஷினில் மேற்கண்ட பொருட்களை போட்டு மென்மையான பதம் வரும் வரை அரையுங்கள்.
முந்திரி பருப்பை கொண்டு காஜூ கத்லி கூட செய்து சுவைக்கலாம்.
சுவைக்கு சுவையும் ஆச்சு ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் ஆச்சு.