கயல் சீரியலால் வாழ்க்கையே போச்சு.. கெஞ்சிய சீரியல் நடிகர் மனைவி-நடந்தது என்ன?

DHUSHI
Report this article
"கயல் சீரியலால் வாழ்க்கையே போச்சு.." என சீரியல் நடிகரின் மனைவி ஊடகங்கள் முன்னாள் கை எடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
கயல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கயல்.
இந்த சீரியலில் சைத்திரா கதாநாயகியாகவும், சஞ்சீவ் கார்த்தி- கதாநாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
பெண்கள் மத்தியில் பிரபலமான சீரியலில், தனியொரு பெண்ணாக நின்று கயல் எப்படி குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார் என்பதனை கருவாக கொண்டு தான் கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டு எழிலையும் கவனித்துக் கொண்டு, தன்னுடைய குடும்பத்தையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதே கதையாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையே போச்சு..
இந்த நிலையில், கயலின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அய்யப்பன் மனைவி ஊடகங்களை வரவழைத்து படப்பிடிப்புத்தளத்திற்கு சென்று பிரச்சினை செய்துள்ளார்.
அதாவது, கடந்த மூன்று மாதங்களாக அய்யப்பன் வீட்டுக்கு வராமல் இருக்கிறார் என்றும், குழந்தையையும் தன்னையும் குடித்து விட்டு அடிப்பதாகவும் கூறுகிறார்.
மேலும், “இனியும் இந்த கயல் சீரியல் வேண்டாம், என்னுடைய குழந்தை அப்பா வேண்டும். ஏனெனின் அவள் பள்ளிக்கு செல்லவுள்ளார், அதற்கு அப்பா வேண்டும், கணவரை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள். அதனால் தான் மீடியாக்களை அழைத்தேன்..” என பேசியுள்ளார்.
இதற்கு சீரியல் குழுவினர் என்ன பதில் கொடுப்பார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |