தினமும் 5 உலர் திராட்சை: உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் என்னென்ன
திராட்சை பழங்கள் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் உலர்திராட்சை உண்பது உடலுக்கு மிகவும் நன்மை தரும்.
இந்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோநியூட்ரியன்கள், பாலிபினால்கள் மற்றும் பல உணவு நார்ச்சத்துகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
இந்த சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன. இந்த சத்துக்கள் உடலின் எந்தவகையில் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உலர் திராட்சை
1.நமது உடலின் தோல்பகுதியில் சில நேரங்களில் பருக்கள் ஏற்பட்டு வறண்ட தன்மை கொண்டு காணப்படுகின்றன. இது ரத்தத்தில் உள்ள மாசுக்களால் உண்டாகும் பிரச்சனையாகும்.
உலர் திராட்சையில் கருப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால் அது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை விரட்டும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சிறப்பாக செயற்பட வழிவகுக்கும்.
2. இந்த திராட்சையில் சோடியத்தின் அளவை குறைக்கும் பண்பு காணப்படுவதால் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அதிக கொழுப்பை உடலில் சேர விடாது.
இதனால் இதயம் நோய்கள் வராமல் பாதுகாப்பாக இருக்கும். இதில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராட உதவும்.
3. உலர் திராட்சைப் பழங்களில் நிறைவான நார்ச்சத்து இருப்பதால் மனிதர்களுக்கு வரக்கூடிய மலச்சிக்கலை குறைக்கும், குடல் இயக்கங்களை ஊக்குவிக்கும்.
குடல்பிரச்சனை உள்ளவர்கள் ஊறவைத்த உலர்திராட்சைகளை சாப்பிட்டால் குடலின் இயக்கத்திற்கு சரியான வழிவகுக்கும்.
4. வாய் துர்நாற்ற பிரச்சனை இருப்பவர்கள் உலர்திராட்சை சாப்பிடுவதால் இது பக்றிரியாக்களை எதிர்த்து போராடுவதுடன் நல்ல வாய் சுகாதாரத்தை பேணுகின்றது.
முடி நரைப்பதை தாமதப்படுத்தும், சருமப்பொலிவு கிடைக்கும். இதில் முக்கிய பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால் வயதானாலும் இளமை போல தோற்றமளிக்க உதவுகின்றது.