Kothu Chapati: பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் கொத்து சப்பாத்தி
கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம், நார்ச்சத்து என உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கோதுமை தானியத்தில் இருந்து பெறப்பட்ட பால், குழந்தைகளுக்கு வலுவினை அளிக்கிறது, கொழுப்பின் அளவை குறைக்கும்.
இப்படி பல நன்மைகளை அள்ளித்தரும் கோதுமையில் சப்பாத்தி, பூரி என செய்து சாப்பிட்டு இருப்போம்.
இந்த பதிவில் கொத்து சப்பாத்தி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சப்பாத்தி- 4
வெங்காயம்- 2
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது- தேவையான அளவு
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை- தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தி தயார் செய்து கொள்ளவும், வெங்காயம்- தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும், ஓரளவு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
இதனுடன் மிளகாய்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும், எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு கிளறவும்.
சிறிதளவு தண்ணீரை தெளித்து விட்டு நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி இழை தூவி இறக்கினால் சுவையான கொத்து சப்பாத்தி தயார்!!!