Typhoid Fever: இரைப்பையை தாக்கும் டைபாய்டு காய்ச்சல்- கவனிக்காமல் விட்டால் ஆபத்து நிச்சயம்
“சால்மோனெல்லா டைஃபி (Salmonella typhi)” எனப்படும் பாக்டீரியா கிருமி உடலுக்கு சென்று 
“டைபாய்டு” பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த நோய்த்தொற்று தரமற்ற நீர், சுகாதாரமற்ற உணவு மூலம் பரவுகின்றது.
குடல் பகுதியை பாதிக்கும் இந்த பாக்டீரியாக்கள் நாளடைவில், கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புக்களை தாக்குகின்றன.
 
    
    Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
நோய் வந்தவர்களுக்கு முதலில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காட்டும். இதனை கண்டுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் மரணம் கூட ஏற்படலாம்.
ஆண்டுதோறும் அமெரிக்காவில் சுமார் 5,700 வழக்குகள் இந்த நோயால் பதிவாகியுள்ளன. இந்த நோய்களில் 75 சதவீதம் சர்வதேச பயணத்தின் போது ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டைபாய்டு உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 21.5 மில்லியன் மக்கள் பாதிக்கின்றனர். இந்த நோய் ஏற்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் வெற்றிகரமாக மருந்துகளால் குணப்படுத்தலாம்.
அந்த வகையில், டைபாய்டு காய்ச்சல் பற்றி பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
டைபாய்டு காய்ச்சல் உடலில் எந்த பகுதியை தாக்கும்?

டைபாய்டு காய்ச்சல் பாக்டீரியா தொற்று காரணமாக பரவும் நோயாகும்.
இந்த நோய் உடலிலுள்ள உறுப்புக்களை குறி வைத்து தாக்கும். கல்லீரல், மண்ணீரல் மற்றும் தசைகள் உட்பட இரைப்பைக் குழாயைத் தாக்குகிறது.
சில சமயங்களில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கமடைந்து காணப்படும்.
அத்துடன் பித்தப்பை, நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றையும் பாக்டீரியா தாக்கும். இதனால் உடலில் பல பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சொறி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், கழுத்து மற்றும் வயிற்றில் வெளிர் சிவப்பு புள்ளிகள் தோன்றும். இது குடல் காய்ச்சலின் வளர்ச்சியைக் காட்டுகின்றன.
குடல் காய்ச்சலின் அறிகுறிகள்

- உடலில் சோர்வு ஏற்படல். அதிக காய்ச்சல் ஏற்படும்.
- எவ்வளவு முயற்சித்தாலும் பசிக்காது. இதனால் சாப்பிடவும் முடியாத நிலை ஏற்படும்.
- கடுமையான தலைவலி இருக்கும்.
- திடீரென வயிற்றுப்போக்கு ஏற்படும்.
- எந்த உணவு சாப்பிட்டாலும் ஒரு வகையான குமட்டல் இருக்கும்.
- வெளியில் இருக்கும் போது திடீரென் மயக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.
- தொண்டை பகுதியில் வலி ஏற்படும்.
- தடிப்புகள் வயிற்று உபாதைகள்
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால் உரிய மருத்துவரை புத்திசாலித்தனமாக பார்ப்பது சிறந்தது. பயணத்திலிருந்து வீடு திரும்பியவுடன் உடனடியாக மருத்துவரை சந்திப்பது சிறந்தது.
 
   
டைபாய்டு காய்ச்சலை எவ்வாறு கண்டறிவது?
- சால்மோனெல்லா டைஃபிக்கு எதிரான ஆன்டிபாடிகளை பரிசோதித்தல்
- காய்ச்சலை சரிபார்க்க ஆய்வக சோதனைகள்
- இரத்தம், மலம் மற்றும் சிறுநீர் மாதிரிகள்
- எலும்பு மஜ்ஜை சோதனை
- இரத்த கலாச்சாரம்

டைபாய்டுக்கான ஆபத்து காரணிகள்
- சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள்
- மோசமான சுகாதாரம்
- பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் செய்தல்.
- டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்வது
- மலம் உண்ணும் பறக்கும் பூச்சி தொடுவதால்

டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டியவை
1. டயட் உணவுகள்
பொதுவாக காய்ச்சல் வந்த பின்னர் உடல் நிலை மோசமாகி விடும். அந்த சமயத்தில் டயட் உணவுகளை எடுத்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கலோரிகளை அதிகரிக்கும். சில காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பார்க்கவே பரிதாப நிலைக்கு செல்வார்கள். அப்போது ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் இழந்த சக்தியை மீண்டும் பெற முடியும்.

2. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. உதாரணமாக உருளைகிழங்கு, கரட், பீட்ரூட், பச்சை பட்டாணி, பூசனிக்காய், வேறு காய்கறி வகைகள். இவற்றை நன்றாக சமைத்த பின்னர் நீங்க சாப்பிடலாம். சாப்பிட முடியாத நிலை இருக்கும் போது சூப் செய்து குடிக்கலாம். இதுவும் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

3. பழங்கள்
காய்ச்சல் நேரம் மாத்திரமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் தினமும் ஒரு பழம் சாப்பிடலாம். இது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். இதன்படி, டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம், மூலாம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பழமாகவோ சாறாகவோ எடுத்து கொள்ளலாம். அரிசி உணவுகள் தாரளமாக எடுத்து கொள்ளலாம். இது உடலுக்கு சக்தியை வழங்கும்.

4. புரதம் நிறைந்த உணவுகள்
காய்ச்சல் சமயங்களில் சாப்பிட முடியாவிட்டாலும் சாப்பிடும் போது புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது உங்களை எழுந்து நிற்பதற்கான சக்தியை கொடுக்கிறது. உதாரணமாக மீன், முட்டை, இறைச்சி வகைகள், பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள். இவை உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது.

சிகிச்சை முறை
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் டைபாய்டு தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொள்ளலாம்.
பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே டைபாய்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தற்போது குழந்தை பிறந்து 6 மாதங்களில் இந்த நோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஒரு தவணை ஊசியை போட்டுக் கொள்ளலாம்.
 
      
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        