அடிக்கடி கை, கால் மரத்துபோவதற்கு என்ன காரணம்? தீர்க்கும் வழிமுறை
நாம் ஒவ்வொரு வேலையையும் செய்வதற்கு நமது உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். இப்படி இருப்பதற்கு நாம் சரியான முறையில் உணவு எடுத்துக்கொள்வது முக்கியம்.
இதை தவிர உடற்பயிற்ச்சிகளில் ஈடுபடுவது அவசியம். ரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
சீரான ரத்த ஓட்டம் கிடைக்காத போது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது. அந்த வகையில் சிலருக்கு அடிக்கடி கால் கை மரத்து போவதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
மரத்து போதல்
நமக்கு நோய் வருகிறது என்றால் அதற்கு முதல் முக்கிய காரணமாக அமைவது உடலில் ரத்த ஓட்டம் இல்லாதது தான்.
ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இதை சீராக மாற்றுவதற்கு சில விஷயங்களை செய்வது மிகவும் முக்கியமாகும். இதை குணப்படுத்த சில உணவுகளும் காணப்படுகின்றது.
கடல்வாழ் மீன்கள் இதற்கு மிகவும் நன்மை தரும். ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ரத்த கட்டுகள் மற்றும் சீரான ரத்த அழுத்தத்தை பராமரிக்க ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் தான் கடலில் வாழும் மீன்களை சாப்பிடுதல் அவசியம்.
இதற்கு வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, போன்ற மீன்கள் நன்மை தரும். உடலில் அதிகமாக கார்போஹைட்ரேட்டு உணவுகளை உண்ண கூடாது.
உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரிக் அமிலம் சிறந்தது.
இந்த பழங்களை உண்ணும் போது சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
இதில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
இதை தவிர இவைகள் நைட்ரிக் அமிலத்தை உருவாக்குவதன் மூலமாக ரத்த நாளங்களை விரிவடைய செய்து, நமது ரத்த ஓட்டத்தை எவ்வித தடைவின்றி சீராக நடைபெறுவதற்கு உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |