இருமல்,சளிக்கு முடிவு கட்டும் ஜப்பானிய மருந்து - இந்த இரண்டு பொருள் போதும்
நீங்கள் சளி, இருமல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டால் ஜப்பானியர்கள் பின்பற்றும் ஒரு இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
இருமல் மற்றும் சளிக்கு ஜப்பானிய வீட்டு வைத்தியம்
வானிலை மாற்றம் ஏற்பட்டால் அந்த கால கட்டத்தில் உடலில், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை வரக்கூடும்.
ஒரு முறை இருமல் வந்தால், அது தொடர்ந்து இருமல்தொடங்கி முடியும் இடம் வரைக்கும் உடலில் வலியை ஏற்படுத்தும். இதற்கு நவீன மருந்துகளை விட இயற்கை வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த ஜப்பானியர்களின் வீட்டு வைத்தியம் தொண்டை வலியைக் குறைத்து இருமலையும் குறைக்கும். இதன் காரணமாக தான் ஜப்பானியர்கள் இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகின்றனர்.
இதற்கு வீட்டில் உள்ள தேனும் வெங்காயமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.

தொண்டை வலிக்கு தீர்வு
இருமல் மற்றும் தொண்டை வலிக்கு இனி வீட்டிலேயே ஒரு வீட்டு வதை்தியம் செய்முறை வீடியோவாக வைரலாகி வருகின்றது. ஜப்பானில் உள்ளவர்கள் இருமலைப் போக்க இந்த முறையைப் பயன்படுத்துகிறார்களாம்.
இதைச் செய்ய, ஒரு நடுத்தர அளவிலான வெங்காயத்தை எடுத்து, அதை வெட்டாமல் உரிக்கவும். கத்தியைப் பயன்படுத்தி, வெங்காயத்தின் மேற்பகுதியை வெட்டி அதை ஒரு குழி போல உருவாக்கவும்.

பின்னர் அதில் சுமார் 2 தேக்கரண்டி தேனைச் சேர்த்து, அரை எலுமிச்சை சாற்றை அதில் பிழியவும்.
பின்னர் கேஸ் அடுப்பை பற்ற வைத்து அந்த பொருட்கள் சேர்க்கபட்ட வெங்காயத்தை அடுப்பில் வைக்கவும். இப்போது தேனை சிறிது சூடாக்கி, இரண்டு சிட்டிகை கல் உப்பைச் சேர்க்கவும்.
கல் உப்பு கிடைக்கவில்லை என்றால், வேறு எந்த உப்பையும் சேர்க்கலாம். அது வெதுவெதுப்பானதாக மாறியதும் கேஸ் அடுப்பை அணைக்கவும். இப்போது தேன் வெதுவெதுப்பாக இருக்கும் போதே அதை சாப்பிடுங்கள்.
இதை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்க கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் தொண்டை புண் மற்றும் இருமலை வெகுவாகக் குறைக்கும் என இந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.

இன்னுமொரு வைத்தியம்
இந்த தேன் மற்றும் கல் உப்பு மருந்து இந்தியாவிலும் சளி மற்றும் இருமலைப் போக்கப் பயன்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர்கள் இது சளியின் விளைவுகளைக் குறைப்பதில் பயனுள்ளதாகக் கூறுகின்றனர்.
இதைச் செய்ய, ஒரு பாத்திரத்தில் தேனை சூடாக்கவும். இப்போது 1 டீஸ்பூன் கல் உப்பை 2 டீஸ்பூன் தேனுடன் கலக்கவும். அதை கையில் ஊற்றி நாக்கை பயன்படுத்தி நக்கி சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் இது இருமல் மற்றும் தொண்டைப் புண்களிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கொடுக்குமாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |