வடிவேலுவின் பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் தெரியுமா? யாருடைய மகன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
நடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்தது ஜி.கே.மணியின் மகன் தான் என்று அவரே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வடிவேலு நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். தான் நடிக்கும் நாய் சேகர் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த பிறந்தநாளில் புதிதாக பிறந்தது போன்று இருக்கிறது. என்னை நிறைய பேர் வாழ்த்தியதில் சந்தோஷம். நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த அளவுக்கு பிரச்சனையை முடித்தது ஐயா தமிழ்குமரன் தான். ஜி.கே. மணி ஐயாவின் மகன் தான் என்றும் லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கிறார் என்றும் இவ்வளவு பிரச்சனையையும் சரி செய்து கொடுத்துள்ளார் என்றும் உண்மையைக் கூறியுள்ளார்.