உடல் எடையை குறைக்க அதிகம் கஷ்டப்படுறீங்களா? தேங்காய் பூ செய்யும் அற்புதம்
தேங்காய் பூவில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் உள்ளன.
தேங்காய் பூ கர்ப்பம் தரிக்க, சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, உடல் எடையை குறைக்க மற்றும் உடச்சத்துகளை பெற போதுமானதாக இருக்கிறது. இப்படி தேங்காய் பூவால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
தேங்காய் பூ கர்ப்ப காலத்தில் சாப்பிட்டால் நல்லது என கூறப்படுகிறது. அதாவது கர்ப காலத்தில் பெண்களுக்கு முதுகுவலி அதிகமாக இருக்கும். அதனை நீக்க தேங்காய் பூ சாப்பிடலாம். அதேபோல் கர்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கும் தேங்காய் பூ மிக நல்லது.
சர்க்கரை நோய் என்பது நீண்டகால் பிரச்சனை ஆகும். தேங்காய் பூ சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். தேங்காயில் இருந்து கிடைக்கும் மாவு நார்ச்சத்து நிறைந்தது. தேங்காய் மாவில் கார்போஹைட்ரேட்கள் குறைவு. எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக தேங்காய் பூ சாப்பிடலாம்.
தேங்காய் பூவில் குறைந்த கலோரிகளும் அதிக நார்ச்சத்தும் உள்ளது. தேங்காய் பூ வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன. இதில் இருந்து கிடைக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் பசியை கட்டுப்படுத்துகிறது.
தேங்காய் பூவில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. அதிக எடை கொண்ட நபர்கள் தேங்காய் பூ சாப்பிட்டு இரத்த சர்க்கரை மற்றும் மொத்த கொழுப்பின் அளவை குறைக்கலாம்.
தேங்காய் பூ கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதேபோல் வயிற்றுப்போக்கு மற்றும் குடல் இயக்க பிரச்சனைகளை தவிர்க்க தேங்காய் பூ பயன்படுத்தப்படுகிறது. மேலும், கொப்பரை தேங்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |