இந்த வியாதியுள்ளவர்கள் மஞ்சளை தொட்டுக் கூட பாக்க கூடாதாம்...! ஏன் தெரியுமா?
நாம் வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு மருத்துவப் பொருள் தான் மஞ்சள். இது சமையலுக்கு மட்டுமல்ல வீடுகளில் நடக்கும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் நன்மைகள்
- மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது
- உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கும்
- அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும்
- இரப்பை தொடர்பான பிரச்சினைகளை சரி செய்யும்
- எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்
- புற்றுநோய் பிரச்சினைகளை கூட சரி செய்ய பயன்படும்
- மூச்சுக்குழாய் அழற்சிக்கு உதவும்
- வலி மற்றும் சரும அரிப்பு நீங்கவும் மஞ்சள் பயன்படும்
இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள இந்த மஞ்சளை இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடவே கூடாதாம்.
மஞ்சளைப் பயன்படுத்தக் கூடாதவர்கள்
நீரிழிவு நோயாளர்கள் சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் இந்த நோயாளிகள் மஞ்சளை அதிகம் உட்கொள்வதால் ரத்தத்தின் அளவு குறைய ஆரம்பித்து விடும் அதனால் உணவில் அளவாக மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்லது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சளை உட்கொண்டால் உடல்நிலை மோசமாகி விடும் அதனால் மஞ்சளை தொடாமல் இருப்பதே நல்லது.
உடலில் இரத்தக் கசிவு உள்ளவர்கள் மஞ்சளை உட்கொண்டால் அதனை உடனே தவிர்த்து விட வேண்டும் ஏனெனில் இரத்தக்கசிவு உள்ளவர்கள் அதிக இரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கி இறுதியில் இரத்த சோகையை ஏற்படுத்தும்.
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிக வலியை அனுபவிக்க நேரிடும்.