புற்றுநோயை குணப்படுத்தும் நீங்கள் எதிர்பாராத மூலிகை! பாலில் கலந்து சாப்பிடுங்கள்..
பொதுவாக இயற்கையாக கிடைக்கும் அனைத்தும் மருத்துவப் பொருட்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த மருத்துவ பொருட்களில் மஞ்சள் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மேலும் மஞ்சள் உணவுப் பொருளாகவும் அழகு சாதனப் பொருளாகவும் மட்டுமின்றி, இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மஞ்சள் வகைகள் இடத்திற்கு ஏற்ப பெருமதியில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக சேலம் (Salem) மற்றும் ஈரோடு (Erode)போன்ற இடங்களில் வளரும் மஞ்சள் பெருமதி வாய்ந்தாக கூறப்படுகிறது.
இவ்வாறு விளையும் மஞ்சள்களில் முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் மற்றும் விரலி மஞ்சள் என் மூன்று வகைகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது.
அந்தவகையில் மஞ்சளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
மஞ்சளின் மகத்துவம்
மஞ்சள் விதையிலுள்ள குர்க்குமின் (Curcumin) என்ற இரசாயன நிறமி மஞ்களுக்கு மஞ்சள் நிறத்தை தருகிறது. இந்த நிறமி புற்றுநோய்க் கட்டிகள் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனின் தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சளில் உள்ள சில இரசாயன பதார்த்தங்கள் இரத்தக் குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் கொலோஸ்ரோல் பிரச்சினையுள்ளவர் மஞ்சளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது பசும்பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை (Antioxidants) அதிகரிக்கிறது. இதனால் உடலில் வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவுவது குறைவாக தடுக்கப்படுகிறது.
பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தூளைக் கலந்து தூளிகளை வீட்டில் தெளிப்பார்கள் இவ்வாறு செய்வதால் வீட்டிலுள்ள கிருமி (Germ) அழிவடைகிறது.
மஞ்சள் தூள் கலந்து உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலிலுள்ள செல்கள் அழிவடையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் சொரி, சிரங்கால் போன்ற பிரச்சினைகளால் தோலில் நிறமாற்றம் ஏற்பட்டால் மஞ்சளை அரைத்துப் பூசினால் எளிதில் குணமடையும்.