குளிர்காலத்தில் ஏன் உணவில் மஞ்சள் அதிகம் சேர்க்க வேண்டும் தெரியுமா?
பொதுவாக அன்றாட சமையலில் சேர்க்கப்படும் ஒரு ஒரு முக்கியமான மசாலாப் பொருள் தான் மஞ்சள் .
மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. மஞ்சள் உணவுக்கு வண்ணத்தை சேர்ப்பதோடு கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது
. அதனால் நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் இருந்தே மஞ்சளை தங்கள் உணவுகளில் சேர்த்து வருகிறார்கள்.
அந்தவகையில் மஞ்சளில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன? நன்மைகள் என்ன என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள்
மஞ்சளில் வைட்டமின் ஏ, தியாமின் (பி 1), ரிபோஃப்ளேவின் (Riboflavin) (பி 2), வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.
இதில் உள்ள குர்குமின் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
நன்மைகள்
- மஞ்சளில் உள்ள குர்குமின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
- செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கவும், இது எடையை குறைக்கவும் உதவுகிறது.
- சரும ஆரோக்கியத்திற்கு சிறந்த பலனை அளிக்கிறது
- உடலில் உள்ள அனைத்து கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
குளிர்காலத்தில் ஏன் மஞ்சள் சேர்க்க வேண்டும்?
குளிர்காலத்தில் உணவில் அதிகமாக மஞ்சள் இடம் பெறுவதை உறுதி செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் இதன் காரணமாக எந்த வித நோயும் குளிர்காலத்தில் வராது குறிப்பாக தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளிலிருந்து மஞ்சள் நிவாரணம் அளிப்பதாக கூறுப்படுகின்றது.