இதையெல்லாம் யாரும் பார்ததில்லை... சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா வெளியிட்ட பதிவு!
நடிகை த்ரிஷாவை சுற்றி சமீப காலமாகவே பல சர்ச்சை கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், தற்போது த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள விடயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தென்னிந்திய சினிமாவின் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாகவே ஜொலித்து வருகின்றார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது.
சமீபத்தில் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

பல சர்ச்சைகள் த்ரிஷாவை சுற்றி வலம் வந்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் த்ரிஷா தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.
இந்நிலையில், காமெடியாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள விடயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில், நான் அதிகாலை 4 மணிக்கு உடற்பயிற்ச்சி செய்வதை யாரும் பார்த்து கிடையாது... நான் வாரம் தோறும் மணிக்கணக்கில் உணவு தயாரிப்பதையும் யாரும் பார்த்தது கிடையாது... யாரும் இதை பார்த்திராதமைக்கு காரணம் நான் அதை செய்தது கிடையாது! என நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.