இலங்கை ஸ்டைலில் அரிசி அரைச்சு ஆப்பம் சுடுவது எப்படி? மொறு மொறு சுவையில் இனி சுடச் சுட ருசியுங்கள்!
தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு தான் ஆப்பம்.
தற்போது கடையில் விற்கப்படும் மாவை வாங்கி தான் நிறைய பேர் ஆப்பம் தயாரிக்கின்றார்கள். ஆனால் உடனடி ஆப்பம் உயிருக்கு ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே இயற்கையான முறையில் ஆப்பம் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி – ஒரு கப்
- பச்சை அரிசி – 2 கப்
- துருவிய தேங்காய் – ஒரு கப்
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- ஊளுந்து – ஒன்னரை டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – அரை டேபிள் ஸ்பூன்
- தேங்காய் பால் – சிறிதளவு
- ஆப்ப சோடா – சிறிதளவு
- சோடா வாட்டர் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில், இட்லி அரிசி பச்சை அரிசி, ஒளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ஆட்டிக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவில், தேங்காய் பால் சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
அடுத்து புளித்த மாவில் சிறிதளவு ஆப்ப சோடா மற்றும் சோடா வாட்டரை சேர்த்து கரைக்கவும்.
பின்பு அடுப்பில் காடாய் வைத்து சூடேரியதும் அதில் மாவை இட்டு கடாயயை சுழற்றி வைக்கவும்.
ஆப்பம் தயாராகி விடும்.