பொன்னியின் செல்வன் ஹீரோயின் குழந்தையா இருக்கும் போது எப்படி இருக்காங்கனு பாருங்க... யாருன்னு தெரியுமா உங்களுக்கு!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஒருவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். நடிகை த்ரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
முதலில் மாடலிங் துறையில் கலக்கியவர் பின்னர் திறைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தற்போது 40 வயதை கடந்து விட்டாலும் கடந்த வருடம் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வரலாற்று கதையாக கொண்டாடும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்தார்.
இவர் தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று அதிகம் வைரலாகி வருகின்ற நிலையில் அதைப் பார்த்து கண்டுபிடிக்கமுடியாத அளவிற்கு இருக்கிறார் நடிகை த்ரிஷா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |