பொன்னியின் செல்வன் 2! அனைத்து கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்த டிரைலர்
இயக்குனர் மணிரத்தினத்தினம் இயக்கத்தில் உருவாகிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டு பாகம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று இதன் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு அரங்கேறியது.
'பொன்னியின் செல்வன் 2' படத்தையும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இதில் உலக நாயகன் கமலஹாசன், இயக்குனர் மணிரத்தினம், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் பாகத்தில் மிகப்பெரிய ட்விஸ்டுடன் இப்படம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இதற்கான விடைகள் கிடைத்துவிடும் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது.